Category Archives: செய்திகள்

நன்செய் அறக்குழு நடத்தும் மாதாந்திர வினா-விடைப் போட்டி – மார்ச் 2021

  இம்மாத போட்டிக்குரிய புத்தகம் : எண்ணங்கள்  வகை: மனோதத்துவம்  ஆசிரியர் : எம்.எஸ்.உதயமூர்த்தி   போட்டி நாள்: 28-03-2021 இடம் : சமுதாயக் கூடம் அழகாபுரம்    மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும் பொருட்டு மாதம் ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுத்து நன்செய் அறக்குழு அறிவிக்கும். அறிவிக்கப்பட்ட புத்தகத்தை மாணவர்கள் வாங்கி முழுமையாகப் படிக்க வேண்டும். அப்புத்தகத்திலிருந்து 25 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்படும். அதில் சரியான ஒன்றை தேர்ந்தெடுத்தால் போதும். அதிக கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்கும் மாணவர்கள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாதமும் […]

Read More

நன்செய் அறக்குழு நடத்திய வினா விடைப் போட்டி – பிப்ரவரி 2021

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டத்தில் அமைந்துள்ள எங்கள் ஊராகிய அழகாபுரம் கிராமத்தில் இயங்கிவரும் நன்செய் அறக்குழுவானது மாணவர்களின் நூல் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும்பொருட்டு எங்கள் மாவட்டத்திலேயே முதன் முயற்சியாக மாதாந்திர வினா-விடைப் போட்டிகளை நடத்தும் திட்டத்தை அறிமுகம் செய்து அதை பிப்ரவரி முதல் மாதாமாதம் நடத்த திட்டமிட்டிருந்தோம். இம்மாதப் போட்டிக்குரிய புத்தமாக ஐயா. அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான “அக்னிச் சிறகுகள்” என்ற நூலை முன்மொழிந்தோம். அதை ஏற்று 25 மாணவர்கள் பெயர் கொடுத்திருந்தனர். அதைதொடர்ந்து […]

Read More

அழகாபுரம் ஊரைப்ற்றிய ஆய்வை மேற்கொள்ள நன்செய் அறக்குழு செய்த ஏற்பாடு

கடந்த 28-11-2020 அன்று நன்செய் அறக்குழு விடுத்த அழைப்பை ஏற்று, தஞ்சை சரஸ்வதி நூலகத்தின் ஓலைச்சுவடி பிரிவின் தலைவரும், கல்வெட்டு மற்றும் வரலாற்று ஆய்வாளருமான முனைவர் திரு. மணிமாறன் மற்றும் அவரது குழுவினர் நமது ஊரை ஆய்வு செய்தனர். அவர்களை ஆண்டிமடத்தில் தங்க வைக்கவும், மதிய உணவும் நன்செய் அறக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஐயா அவர்களின் குழு முதலில் சிவன்கோவிலை ஆய்வு செய்தார்கள்.     அதைத் தொடர்ந்து சின்ன ஏரிக்கரையில் அமைந்துள்ள பழங்கால கற்சிலைகளை ஆய்வு […]

Read More

மாற்றுத்திறனாளி மாணவர் முனிரத்தினத்தின் படிப்பிற்கு நன்செய் வழங்கிய நன்கொடை

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர் திரு. முனிரத்தினத்தின் முனைவர் படிப்பிற்கு தேவையான புத்தகங்கள் ரூபாய். 4000 மதிப்பில் வாங்கிக்கொள்ள பணம் அனுப்பப்பட்டது.   அதைத்தொடர்ந்து அவரின் தேர்வுக்கட்டணத்திற்கு தேவையான ரூபாய். 10,000 நன்செய் அறக்குழு மூலம் அனுப்பிவைக்கப்ட்ட்டது. DBS iBanking-Munirathinam

Read More

மரம் கருப்பையா அவர்களின் மருத்துவச் செலவிற்கு நன்செய் அறக்குழு திரட்டிய உதவித்தொகை

மரம் கருப்பையா அவர்களை நன்செய் அறக்குழுவினர் சந்தித்து அவர்களுக்கு  நன்செய் சார்பாக ரூபாய் பத்தாயிரம் ரூபாய் (10,000) ஐயா அவர்களின் மருத்துவச் செலவிற்காக ஐயாவின் மகனிடம் வழங்கப்பட்டது.     மரம் கருப்பையா அவர்களுக்கு நன்கொடை வழங்கிய உள்ளங்கள் மரம் கருப்பையா அவர்களுக்கு உதவி

Read More

தைப்பூசத்திற்கு விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு

தமிழர்களின் புனித நாளான தைப்பூசத் திருநாளுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்து தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி தமிழர் பண்பாட்டை மீட்டெடுத்த தமிழக முதல்வர் எடப்படியார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டு அழகாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Read More

அழகாபுரம் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு நன்றி அறிவிப்பு

அழகாபுரம் அரசு உயர்நிலை பள்ளி மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த உத்தரவிட்ட தமிழக முதல்வர் அவர்களுக்கும், ஊர் பொதுமக்கள் , ஒன்றிய வார்டு கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற கொறடா மற்றும் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இப்பணியை முன்னெடுத்து அனைத்து அரசு துறைகளிடம் இருந்து தடை இல்லா சான்றுகளை பெற்று தர உறுதுணையாக இருந்த CONFIDENT BOYS CRICKET CLUB அணி நண்பர்களுக்கு வெற்றி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். இதே போல நம் […]

Read More

நன்செய் அறக்குழு கிராமசபைப் பற்றி மக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு

நன்செய் அறக்குழுவினர் சார்பாக மக்களுக்கு கிராம சபைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஊரின் முக்கிய இடத்தில் கிராம சபைக் குறித்த விளம்பரப் பலகை வைக்கப்பட்டது. மேலும் நன்செய் அறக்குழுவினர் மக்களுக்கு கிராம சபைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முக்கிய 30 கேள்விகள் மற்றும் பதில்கள் அடங்கிய 2000 துண்டு பிரசுரங்களை ஊராட்சி முழுவதும் வழங்கப்பட்டது. அதி உள்ள கேள்வி பதில்கள் பின்வருமாறு… கிராம சபைக் கூட்டம் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள் […]

Read More

நன்செய் இணையதளத் துவக்க விழா

அழகாபுரம் கிராம வளர்ச்சிக்காக நன்செய் அறக்குழுவின் இணையதள துவக்க விழா 05-01-2021 அன்று மாலை 4.00மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சீத்தாலட்சுமி செல்வராசு அவர்கள் முன்ன்லை வகிக்க, தமிழைய்யா திரு. கோவிந்தசாமி அவர்கள் தலைமை தாங்க, நல்லோர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பாலசுப்ரமணியம் அவர்கள் துவக்கி வைத்தார்.   விழாவில் அனைத்து வயதினரும் கலந்துக்கொண்டு சிறப்பு செய்தனர். கிராம மக்கள் பலர் நன்செய் அமைப்பின் செயல்பாடுகளை கூறி அதற்கு உறுதுணை செய்திடும் ஒன்றுபட்ட […]

Read More

நன்செய் அறக்குழு கட்டடம் அழகாபுரம், ஆண்டிமடம் வட்டம், அரியலூர் மாவட்டம் 608901

அழகாபுரம் பொதுமக்களின் ஒத்துழைப்புடனும், நன்செய் அறக்குழு உறவுகளின் பங்களிப்புடனும், கொடையாளர்களின் அன்பளிப்புடனும் 2023ஆம் ஆண்டு சனவரித் துவங்கி அதே ஆண்டில் கட்டி முடிக்கப்படவுள்ள நன்செய் கட்டடத்தின் அழகியத் தோற்றம்.  

Read More