மரம் கருப்பையா அவர்களின் மருத்துவச் செலவிற்கு நன்செய் அறக்குழு திரட்டிய உதவித்தொகை
மரம் கருப்பையா அவர்களை நன்செய் அறக்குழுவினர் சந்தித்து அவர்களுக்கு நன்செய் சார்பாக ரூபாய் பத்தாயிரம் ரூபாய் (10,000) ஐயா அவர்களின் மருத்துவச் செலவிற்காக ஐயாவின் மகனிடம் வழங்கப்பட்டது. மரம் கருப்பையா அவர்களுக்கு நன்கொடை வழங்கிய உள்ளங்கள் மரம் கருப்பையா அவர்களுக்கு உதவி
Read Moreநன்செய் அறக்குழு தயாரித்த அழகாபுரம் கிராமத்தின் வரைபடம்
அழகாபுரம் மக்களுக்கு உதவும் நோக்கில் நமது கிராமத்தின் வரைபடத்தை புல எண்களோடும், முக்கிய கோவில் குளங்களின் இருப்பிடத்தை சுட்டியும் நன்செய் அறக்குழுவினரால் வரையப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தங்களின் நிலம் மற்றும் வீடுகள் உள்ள இடத்திற்கான வரைபடத்தை கேட்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்தால் நாங்கள் வரைந்து தருகிறோம். ஊரில் வரைபடத்தை விரும்புவோர் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். Azhakapuram-Village Map
Read Moreதைப்பூசத்திற்கு விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
தமிழர்களின் புனித நாளான தைப்பூசத் திருநாளுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்து தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி தமிழர் பண்பாட்டை மீட்டெடுத்த தமிழக முதல்வர் எடப்படியார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டு அழகாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Read Moreஅழகாபுரம் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு நன்றி அறிவிப்பு
அழகாபுரம் அரசு உயர்நிலை பள்ளி மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த உத்தரவிட்ட தமிழக முதல்வர் அவர்களுக்கும், ஊர் பொதுமக்கள் , ஒன்றிய வார்டு கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற கொறடா மற்றும் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இப்பணியை முன்னெடுத்து அனைத்து அரசு துறைகளிடம் இருந்து தடை இல்லா சான்றுகளை பெற்று தர உறுதுணையாக இருந்த CONFIDENT BOYS CRICKET CLUB அணி நண்பர்களுக்கு வெற்றி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். இதே போல நம் […]
Read Moreநன்செய் அறக்குழு கிராமசபைப் பற்றி மக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு
நன்செய் அறக்குழுவினர் சார்பாக மக்களுக்கு கிராம சபைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஊரின் முக்கிய இடத்தில் கிராம சபைக் குறித்த விளம்பரப் பலகை வைக்கப்பட்டது. மேலும் நன்செய் அறக்குழுவினர் மக்களுக்கு கிராம சபைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முக்கிய 30 கேள்விகள் மற்றும் பதில்கள் அடங்கிய 2000 துண்டு பிரசுரங்களை ஊராட்சி முழுவதும் வழங்கப்பட்டது. அதி உள்ள கேள்வி பதில்கள் பின்வருமாறு… கிராம சபைக் கூட்டம் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள் […]
Read Moreநன்செய் இணையதளத் துவக்க விழா
அழகாபுரம் கிராம வளர்ச்சிக்காக நன்செய் அறக்குழுவின் இணையதள துவக்க விழா 05-01-2021 அன்று மாலை 4.00மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சீத்தாலட்சுமி செல்வராசு அவர்கள் முன்ன்லை வகிக்க, தமிழைய்யா திரு. கோவிந்தசாமி அவர்கள் தலைமை தாங்க, நல்லோர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பாலசுப்ரமணியம் அவர்கள் துவக்கி வைத்தார். விழாவில் அனைத்து வயதினரும் கலந்துக்கொண்டு சிறப்பு செய்தனர். கிராம மக்கள் பலர் நன்செய் அமைப்பின் செயல்பாடுகளை கூறி அதற்கு உறுதுணை செய்திடும் ஒன்றுபட்ட […]
Read Moreநன்செய் அறக்குழு கட்டடம் அழகாபுரம், ஆண்டிமடம் வட்டம், அரியலூர் மாவட்டம் 608901
அழகாபுரம் பொதுமக்களின் ஒத்துழைப்புடனும், நன்செய் அறக்குழு உறவுகளின் பங்களிப்புடனும், கொடையாளர்களின் அன்பளிப்புடனும் 2023ஆம் ஆண்டு சனவரித் துவங்கி அதே ஆண்டில் கட்டி முடிக்கப்படவுள்ள நன்செய் கட்டடத்தின் அழகியத் தோற்றம்.
Read Moreநன்செய் அறக்குழு ஊர் மக்களுக்கு வழங்கிய பயனுள்ள நாட்காட்டியும் அழகிய துணிப்பையும்
நாள் : 24-12-2020 2021ஆம் ஆண்டு நாட்காட்டியின் முதல் பக்கம் 2021ஆம் ஆண்டு நாட்காட்டியின் இரண்டாம் பக்கம் துணிப்பையுடன் நாட்காட்டி வழங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மேலும் நன்செய் அறக்குழுவின் அறப்பணிகள் தொடரும் […]
Read Moreபொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் 2021
அழகாபுரம் கிராமத்தில் 16-01-2021 அன்று காணும் பொங்கலையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வடக்குத் தெருவில் நடந்த போட்டிகள் மற்றும் கொண்டாட்டங்கள்: தெற்குத் தெருவில் நடந்த போட்டிகள் மற்றும் கொண்டாட்டங்கள்:
Read More