கலைப் பண்பாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு(25/04/2024)

கலைப் பண்பாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு(25/04/2024)

ஆண்டிமடம், ஏப்.26- அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வட்டார வளமையத்தின் சார்பில் அழகாபுரம் நன்செய் அறக்குழு மற்றும் இலையூர் வாரியங்காவல் பிரைடு ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் கலை பண்பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங் கப்பட்டன.

இந்நிகழ்வில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்முருகன், வட்டாரகல்வி அலுவலர் சந்திரலேகா மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருமைராஜ், நன்செய் அறக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் சார்பாக அறக்குழு உறுப்பினர்களும், இல்லம் தேடி கல்வி சி.எஸ்.ஓ. ஒருங்கிணைப்பாளர் திருப்பதியும் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங் கினர்.

இதில் ஆண்டிமடம் ஒன்றியத்தில் உள்ள அரசு மேல் நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண் டனர்.

முன்னதாக வட்டார வளமை ஆசிரியர் பயிற்றுனர் அகிலா அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.

முடிவில் இல்லம் தேடி கல்வி ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *