நன்செய் அறக்குழு அழகாபுரம் செயற்குழு கூட்டம். நாள்-(12-02-2022)

நன்செய் அறக்குழு அழகாபுரம் செயற்குழு கூட்டம். நாள்-(12-02-2022)

நன்செய் அறக்குழுவின் செயற்குழு கூடுதல் இன்று 12-02-2022 சிங்கப்பூர் நேரம் இரவு 10.00மணிக்கு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திரு. வேல்முருகன், திரு. ரெ. சுரேஷ், திரு. இரா. பாலமுருகன், திரு. செ. வீரவேல், திரு. கு. சிவன்ராஜ், திரு. பா. சத்தியராஜ், திரு. கொ. செல்வக்குமரன், திரு. மு. அறிவழகன், திரு. இரா. மோகன்ராஜ், திரு. மணிமாறன், திரு. இ. ரஞ்சித்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டதில் குழுவின் சில கொள்கைகளை மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு அதனடிப்படையில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. குழுவில் எந்தவொரு நபரின் ஜாமீன் இல்லாமல் $2000 வரை குழுவின் உறுப்பினர்கள் கடன் வாங்கிக்கொள்ளலாம்.

2. $2000க்கு மேல் $5000 வரை கடன் தேவை என்றால் ஏற்கனவே குழுவில் கடன் வாங்கி அதை நாணயம் தவறாமல் திருப்பிச்செலுத்திய அல்லது செலுத்தி வருகிற ஒரு நபர் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் எந்தவொரு நபரும் அதிகபட்சம் $5000க்கு மேல் கடன் பெற இயலாது.
3. குழுவில் கடன்வாங்கிவிட்டு அதை திருப்பித் தராமல் ஏய்ப்போரை கண்டிக்கவோ அவர்கள் தரவேண்டிய பணத்தை திருப்பிச்செலுத்தும்படி வலியுறுத்தும் நோக்கில் அவர்களை நேரிடையாகவோ, தொலைபேசியிலோ தொடர்புகொண்டு கேட்பது குழுவின் பொருளாளரின் பொறுப்பு மட்டுமன்று. அது அனைவரின் பொறுப்பு என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இனி குழுவில் யார் சரியான முறையில் தங்கள் பங்களிப்பை செலுத்தவில்லையோ அவர்களை குழுவில் உள்ள யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கேட்பார்கள்.

4. குழுவின் சேமிப்பு $70,000 (நண்பரின் $10,000 உட்பட) தொடும்போது, அந்தத் தொகைக்கு பிறகு குழுவில் சேமிக்கிற சேமிப்பு பணத்தை மாற்று வழியில் எவ்வாறு சேமிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதில் திரு. ரெ. சுரேஷ் அவர்களின் யோசனைப்படி நிலத்தை அடமானமாகப் பெற்றுக்கொண்டு ஊரில் கடன் கேட்போருக்கு கடன் கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

5. ஏற்கனவே நன்செய் கட்டடத்தை திருக்கோணம் சாலையில் கட்டுவதாக அறிவிப்பு செய்திருந்ததன் தொடர்பாக திரு. செல்வக்குமரன் தனது அதிருப்தியை தெரிவித்தார். அது அழகாபுரத்தில் உள்ள பிள்ளைகளுக்கு கூட மிக தொலைவில் உள்ளதாகவும், பிற ஊரைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இன்னும் அதிக தூரத்தில் உள்ளதாகவும், மேலும் அதன் எதிரிலேயே சாராயக்கடை செயல்பட்டு வருவதாலும் அந்த இடம் வேண்டாம், அதற்கு பதிலாக அழகாபுரம் —— அகரம் சாலையிலோ அல்லது அழகாபுரம் ———- சிலுவைச்சேரி சாலையிலோ ஒரு நல்ல இடம் கிடைக்கிறதா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி ஏதும் சரியான இடம் ஏதும் கிடைக்காத பட்சத்தில் முன்பு ஆலோசித்தபடி சிவன் கோவில் அருகிலேயே கட்டிக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆகவே நன்செய் கட்டடம் திருக்கோணம் சாலையில் இனி அமைய வாய்ப்புகள் இல்லை.

6. கட்டுமானப்பொருட்களின் விலை ஏற்றத்தாலும், கட்டடம் கட்டும் பொறுப்பை முழுமையாக பொறுப்பேற்று செய்ய தன்னார்வலர்கள் யாரும் தற்சமயம் இல்லாத காரணத்தாலும் நன்செய் கட்டடம் கட்டும் பணியை 2023 ஆண்டுக்கு பதிலாக 2025 ஆம் ஆண்டு துவக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.

7. பாலாவின் நண்பர் நன்செய் குழுவிற்காக கொடுத்த $10,000 பணம் 2023ஆம் ஆண்டு வரை பயன்படுத்திக்கொள்ள மட்டுமே அனுமதித்து உள்ளதால் நன்செய் அறக்குழு அப்பணத்தை அவருக்கு 2023க்குள் திருப்பியளிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *