நன்செய் அறக்குழுவின் 12வாரக் கூடுதல்

நன்செய் அறக்குழுவின் 12வாரக் கூடுதல்

20.03.2021 அன்று நடந்த நன்செய் அறக்குழுவின் 12வது இணைய தள வாரக்கூடுதலில் சிங்கப்பூரில் வசிக்கும் உறவுகள் திரு. ப. வேல்முருகன், திரு. இரா. பாலமுருகன், திரு. இர. சுரேஷ், திரு. கொ. செல்வக்குமரன்,  திரு. செ. வீரவேல், திரு. செ. வினோத் அவர்களும், அமீரகத்திலிருந்து திரு. சு. பாக்கியராஜ் அவர்களும், இந்தியாவிலிருந்து, திரு. செ.பாஸ்கர், திருமதி. பா. சுமதி, திரு. வெங்கடேசன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

குழுவினர் கலந்துரைத்ததில் நிறைவேற்றிய சில முக்கியத் தீர்மானங்கள் உங்கள் பார்வைக்கு:

1. வினா-விடைப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் போட்டி எவ்வாறு நடத்தாலாம் என ஆலோசிக்கப்பட்டது.

2. வைரமுத்துவின் மரம் பேசும் மொழி என்ற புத்தகம் செல்வகுமார் அவர்களால் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவ்வருடத்திற்கான புத்தகங்களின் தலைப்புகள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதால் அடுத்த வருடப் போட்டிகளில் இப்புத்தகத்தை தலைப்பாக வைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

3.நேரத்தை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா என்பதை பரிசோதனை செய்ய, நேர நிர்வாக வல்லுநர்கள் பரிந்துரை செய்யும் வழிமுறைகளில் ஒன்றை திரு. பாலமுருகன் அவர்கள் விளக்கினால். அந்த செய்முறை பயிற்சி பாலமுருகன் அவர்களால் விரிவாக அனைவருக்கும் விளக்கப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு:-

நமது வேலைகளை 4 வகையாக பட்டியலிட வேண்டும்

அ. முக்கியமானவை மற்றும் அவசரமானவை;
ஆ. முக்கியமானவை ஆனால் அவசரமில்லாதவை;
இ. முக்கியமல்லாதவை ஆனால் அவசரமானவை;
ஈ. முக்கியமல்லாதவை மற்றும் அவசரமில்லாதவை

நாம் (அ) மற்றும் (ஆ) வில் குறிப்பிட்டவையில் அதிக நேரத்தை செலவழித்தால் நாம் முன்னேற்றத்தை நோக்கி போகிறோம் என்று பொருள். அதே சமயம் (இ) மற்றும் (ஈ) ல் அதிக நேரம் செலவழித்தால் நேரத்தை வீணடித்து பின்னோக்கி செல்கிறோம் என்று பொருள்.

உதாரணமாக நாம் Youtube போன்ற இணைய தளத்தில் நாம் நம் முன்னேற்றதிற்காக நேரத்தை செலவழிக்கிறோமா அல்லது வெறும் பொழுதுபோக்கிற்காக தேவையில்லாமல் நேரத்தை செலவழிக்கிறோமா என்பதே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது போன்ற எடுத்துக்காட்டுக்களை கூறி நேரத்தை எப்படி கையாள்வது என்பது குறித்து அனைவராலும் ஆலோசிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *