நன்செய் அறக்குழுவின் 11வாரக் கூடுதல்

நன்செய் அறக்குழுவின் 11வாரக் கூடுதல்

13.03.2021 அன்று நடந்த நன்செய் அறக்குழுவின் 11வது இணைய தள வாரக்கூடுதலில் சிங்கப்பூரில் வசிக்கும் உறவுகள் ப. வேல்முருகன், இரா. பாலமுருகன், இர. சுரேஷ், கொ. செல்வக்குமரன், த. பிரகாஷ், செ. வீரவேல், செ. வினோத் அவர்களும், இந்தியாவிலிருந்து இரா. கோவிந்தசாமி, மு.அறிவழகன், இர. ராஜ்குமார், ச. ரகுநாத் மற்றும் வெங்கடேசன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

குழுவினர் கலந்துரைத்ததில் நிறைவேற்றிய சில முக்கியத் தீர்மானங்கள் உங்கள் பார்வைக்கு:

1. இந்த வருடம் முழுவதற்குமான வினா-விடைப் போட்டிக்கான புத்தகங்களின் தலைப்பை முன்கூட்டியே அறிவித்தலும், வினா-விடைப் போட்டிக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே புத்தகம் மாணவர்களுக்கு கிடைக்குமாறு வழிவகை செய்தலும் வேண்டும்.

அதனடிப்படையில் குழுவினர் தேர்ந்தெடுத்துள்ள சில புத்தகங்களின் தலைப்புகள் பின்வருமாறு

மார்ச் – எண்ணங்கள்
ஏப்ரல் – பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
மே – 1% தீர்வு
ஜூன் – சிந்தனை மூலம் செல்வம்
ஜூலை – பாபிலோனின் மிகப்பெரியப் பணக்காரன்
ஆகஸ்டு – சிவகாமியின் சபதம்
செப்டம்பர் – பார்த்திபன் கனவு
அக்டோபர் – பொன்னியின் செல்வன் பாகம் 1
நவம்பர் – பொன்னியின் செல்வன் பாகம் 2
டிசம்பர் – பொன்னியின் செல்வன் பாகம் 3

2. எதிர்காலத்தில்
பள்ளி மாணவர்களுக்கு கோலாட்டம் மற்றும் சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளை அறிய வழிவகை செய்யத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

3. திரு.அறிவழகன் அவர்கள் வினா-விடைப் போட்டிக்கு தயார் செய்யும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு இம்மாத போட்டிக்கான எண்ணங்கள் புத்தகத்தை எளிய வகையில் புரியும் வண்ணம் அவரை ஆசிரியரைப்போன்று கற்று கொடுப்பது மட்டுமல்லாமல் போட்டியையும் செம்மையாக நடத்திவரும் திரு. மு. அறிவழகன், திரு. பாஸ்கர், திரு. ராஜ்குமார் ஆகியோருக்கு குழு சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *