நன்செய் அறக்குழு நடத்தும் மாதாந்திர வினா-விடைப் போட்டி

நன்செய் அறக்குழு நடத்தும் மாதாந்திர வினா-விடைப் போட்டி

நன்செய் அறக்குழு நடத்தும் வினா-விடைப் போட்டி

 

இம்மாத போட்டிக்குரிய புத்தகம் : அக்னிச் சிறகுகள்

வகை: வாழ்க்கை வரலாறு

ஆசிரியர் : ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் & அருண் திவாரி 

போட்டி நாள்: 28-02-2021

இடம் : சமுதாயக் கூடம் அழகாபுரம் 

 

  • மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும் பொருட்டு மாதம் ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுத்து நன்செய் அறக்குழு அறிவிக்கும்.
  • அறிவிக்கப்பட்ட புத்தகத்தை மாணவர்கள் வாங்கி முழுமையாகப் படிக்க வேண்டும். அப்புத்தகத்திலிருந்து 25 கேள்விகள் கேட்கப்படும்.
  • ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்படும். அதில் சரியான ஒன்றை தேர்ந்தெடுத்தால் போதும்.
  • அதிக கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்கும் மாணவர்கள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • ஒவ்வொரு மாதமும் முதல் தேதி போட்டிக்குரிய புத்தகத்தை நன்செய் அறக்குழு அறிவிக்கும். அந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை போட்டிகள் அழகாபுரம் சமுதாய கூடத்தில் நடக்கும்.
  • வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ₹ 2000, இரண்டாம் பரிசு ₹ 1500, மூன்றாம் பரிசு ₹ 1000 ஆக வழங்கப்படும்.
  • இப்போட்டிகள் மாதந்தோறும் நடைபெறும்.

 

இந்த ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் போட்டிகளில் தொடர்ந்து பங்கெடுக்கும் மாணவர்களில் 50 சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து இந்த ஆண்டின் இறுதியில் பண்டைய சோழ தேசத்தின் வரலாற்று சிறப்புமிக்க கீழ்கண்ட ஊர்களுக்கு நன்செய் அறக்குழுவினரால் இலவசமாக கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள்.

  1. திருவல்லம்
  2. தக்கோலம்
  3. காஞ்சிபுரம்
  4. மாமல்லபுரம்
  5. திருக்கோவிலூர்
  6. வீரநாராயண எரி (வீராணம்)
  7. சிதம்பரம்
  8. கொள்ளிடம்
  9. கொல்லிமலை
  10. கடம்பூர்
  11. திருப்பனந்தாள்
  12. பழுவூர்
  13. கீழைப் பழுவூர்
  14. திருமழைப்பாடி
  15. புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)
  16. திருபுறம்பியம்
  17. குடந்தை (கும்பகோணம்)
  18. பழையாறை
  19. திருவையாறு
  20. தஞ்சாவூர்
  21. உறையூர்
  22. கொடும்பாளூர்
  23. கோடிக்கரை

தொடர்புக்கு :

அறிவழகன் : +91 82206 85553

பாஸ்கர் : +91 80120 40502

ராஜ்குமார் +91 73975 90629

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *