அழகாபுரம் ஊரைப்ற்றிய ஆய்வை மேற்கொள்ள நன்செய் அறக்குழு செய்த ஏற்பாடு

அழகாபுரம் ஊரைப்ற்றிய ஆய்வை மேற்கொள்ள நன்செய் அறக்குழு செய்த ஏற்பாடு

கடந்த 28-11-2020 அன்று நன்செய் அறக்குழு விடுத்த அழைப்பை ஏற்று, தஞ்சை சரஸ்வதி நூலகத்தின் ஓலைச்சுவடி பிரிவின் தலைவரும், கல்வெட்டு மற்றும் வரலாற்று ஆய்வாளருமான முனைவர் திரு. மணிமாறன் மற்றும் அவரது குழுவினர் நமது ஊரை ஆய்வு செய்தனர். அவர்களை ஆண்டிமடத்தில் தங்க வைக்கவும், மதிய உணவும் நன்செய் அறக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஐயா அவர்களின் குழு முதலில் சிவன்கோவிலை ஆய்வு செய்தார்கள்.

 

 

அதைத் தொடர்ந்து சின்ன ஏரிக்கரையில் அமைந்துள்ள பழங்கால கற்சிலைகளை ஆய்வு செய்தார்கள்..

அதைத் தொடர்ந்து மேற்கே அமைந்துள்ள ஐயனார் கோவிலை ஆய்வு செய்தார்கள்.

அதைத் தொடர்ந்து மேற்கே காட்டில் அமைந்துள்ள எல்லைமுனி கோவிலை ஆய்வு செய்தார்கள்.

அதன் பிறகு அகரத்தில் உள்ள சிவன் கோவிலையும், ஒலையூரில் அமைந்துள்ள சிவன் கோவிலையும் ஆய்வு செய்துவிட்டு பிறகு ராஜேந்திரபட்டினம் சிவன் கோவிலையும் பார்வையிட்டுவிட்டு தஞ்சாவூர் சென்றடைந்தார்கள்.

ஐயா அவர்கள் அவர்களின் பயணத்தில் கிடைத்த தகவல்களை சேகரித்து நமது ஊரைப் பற்றிய குறிப்பை ஒரு புத்தகமாக எழுதி வருகிறார். விரைவில் புத்தக வடிவில் நம் கைகளில் தவழும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *