நன்செய் கட்டடத்திற்கான இடத்தை பெறுதல்
நன்செய் கட்டடத்தை கட்டுவதற்கான இடத்தை நன்செய் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. இரா. பாலமுருகன் அவர்கள் வழங்குகிறார். ஏற்கனவே அழகாபுரம் சிவன் கோவில் அருகில் புல எண் 391 உட்பிரிவு 7 ல் அவர் சமீபத்தில் வாங்கிய 12.6 செண்டு இடத்தை வழங்க விருப்பம் தெரிவித்திருந்தார். கட்டடத்தில் அளவு கருதியும், அதில் அமையவிருக்கின்ற வசதிகள் காரணமாகவும் அந்த சிறிய இடம் போதுமானாதாக இருக்காது என்ற காரணத்தால் இப்போது திருக்கோணம் சாலையில் அமைந்துள்ள புல எண் 6 உட்பிரிவு எண் 1Kல் அவருக்கு சொந்தமான 52செண்டு இடத்தில் 15 செண்டு இடத்தை குழுவின் கட்டடத்திற்காக வழங்க முன்வந்திருக்கிறார்.
