ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் “நன்செய் அறக்குழு” சார்பாக விருதுகள் வழங்கும் விழா”(11-02-2024)

ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் “நன்செய் அறக்குழு” சார்பாக விருதுகள் வழங்கும் விழா”(11-02-2024)

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், ஆண்டிமடம், செங்குந்தர் திருமண மண்டபத்தில் ஆண்டி மடம் ஒன்றிய அளவில் சிறப்பாக செயல்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் , முதுநிலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், மாணவர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்ட கல்வித் துறையில் மாணவர் நலனில் அக்கறையோடு சீரிய பணியாற்றிய ஆசிரிய பெருமக்களுக்கு , மென்மேலும் ஆண்டிமடம் ஒன்றிய அளவில் மாணவர் கல்வி நலனில் அக்கறையோடு ஆசிரியர்கள் செயல்பட“நன்செய் அறக்குழு” மூலம், விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருது விழா மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் அவர்களினஅழைப்பின் மகிழ்வில் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் நன்செய் அறக்குழுவின் நிறுவனர் திரு.பாலமுருகன் அவர்கள் வரவேற்று பேசினார், சிறப்பு விருந்தினர்களாக திரு.AVM சாமிநாதன், திரு. கொங்குவேல்மணிவண்ணன் மற்றும் தலைமையாசிரியர்கள்

திரு.தமிழ்முருகன்,

திரு.வீரபாண்டியன்

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

திருமதி.செந்தமிழ்செல்வி, ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

திரு.தண்டபாணி,

செஞ்சிலுவை சங்க மாவட்ட கன்வீனர்

திரு.சிவசங்கர்,

கல்வி மாவட்ட ஒரு ங்கிணைப்பாளர் திரு.ஸ்டைல்காந்த் அவர்களும்

வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு.அருமைராஜ் அவர்களும் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியை நன்செய் அறக்குழு தலைவர் திரு.வீரவேல் அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் இறுதியாக

இல்லம் தேடிக் கல்வி குடிமைப்பணி சமூக அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் திரு.திருப்பதி ஆசிரியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *