அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டார அளவிலான கலைத்திருவிழா – போட்டிகளில் கலந்துகொண்டு – வெற்றிப்பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டார அளவிலான கலைத்திருவிழா – போட்டிகளில் கலந்துகொண்டு – வெற்றிப்பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா 07-03-2023 அன்று மதியம் 2 மணியளவில் ஆண்டிமடம் வன்னியர் குலஷத்ரியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி. முனியம்மா அவர்கள் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்ப்பார்வையாளர் திரு.அருமைராஜ் அவர்கள் வரவேற்று பேசினார். மாவட்ட இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் (CSO) மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் திரு.திருப்பதி, திரு.ராஜா, மற்றும் ஆண்டிமடம் வட்டார ஆசிரியர் பயிற்றுநர் திருமதி.சத்யபாமா, திருமதி.அகிலா, ஜெயங்கொண்டம் ஒன்றிய ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு.சரவணன், திரு.தாமோதரன், நன்செய் அறக் குழுவின் நிர்வாகக் குழுத்தலைவர் திரு.வீரவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் நன்செய் அறக் குழுவின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திரு. கா.சாமிநாதன், திரு. இரா.கோவிந்தசாமி, திருமதி. சுமதி பாலமுருகன் மற்றும் நன்செய் களப்பணிக்குழு உறுப்பினர்கள் திரு. இர. இராஜ்குமார் மற்றும் ப.சதீஷ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர். வெற்றிப்பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை ஆண்டிமடம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் அலுவலக பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
கலைத்திருவிழா – போட்டிக்கான மொத்தசெலவு= ரூபாய் 70,000.
வரவேற்புரை:-

