நன்செய் அறக்குழு நடத்தும் மாதாந்திர வினா-விடைப் போட்டி – மார்ச் 2021

நன்செய் அறக்குழு நடத்தும் மாதாந்திர வினா-விடைப் போட்டி – மார்ச் 2021

 

இம்மாத போட்டிக்குரிய புத்தகம் : எண்ணங்கள் 

வகைமனோதத்துவம் 

ஆசிரியர் : எம்.எஸ்.உதயமூர்த்தி  

போட்டி நாள்28-03-2021

இடம் : சமுதாயக் கூடம் அழகாபுரம் 

 

  • மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும் பொருட்டு மாதம் ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுத்து நன்செய் அறக்குழு அறிவிக்கும்.
  • அறிவிக்கப்பட்ட புத்தகத்தை மாணவர்கள் வாங்கி முழுமையாகப் படிக்க வேண்டும். அப்புத்தகத்திலிருந்து 25 கேள்விகள் கேட்கப்படும்.
  • ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்படும். அதில் சரியான ஒன்றை தேர்ந்தெடுத்தால் போதும்.
  • அதிக கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்கும் மாணவர்கள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • ஒவ்வொரு மாதமும் முதல் தேதி போட்டிக்குரிய புத்தகத்தை நன்செய் அறக்குழு அறிவிக்கும். அந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை போட்டிகள் அழகாபுரம் சமுதாய கூடத்தில் நடக்கும்.
  • வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ₹ 2000, இரண்டாம் பரிசு ₹ 1500, மூன்றாம் பரிசு ₹ 1000 ஆக வழங்கப்படும்.
  • இப்போட்டிகள் மாதந்தோறும் நடைபெறும்.

 

நன்செய் அறக்குழு மாதாமாதம் போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்குகிறது. அதை பெற்றுச் செல்லும் மாணவர்கள் தங்கள் வீடுகளில், நிலங்களில் அல்லது பொது இடங்களில் நட்டு, பராமரித்து வளர்த்து வரவேண்டும். இந்த ஆண்டின் முடிவில் அதிக போட்டிகளில் பங்கெடுத்து அதிக மரங்களை நட்டு வளர்க்கும் மாணவர்களை அவர்கள் மரம் வளர்க்கும் இடத்திற்கு சென்று மதிப்பிட்டு சிறந்த 50 மாணவர்களை தேர்ந்தெடுத்து பண்டைய சோழ தேசத்தின் முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களுக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிப்பு: போட்டிகளில் கலந்துகொண்டமைக்காகப் பெறப்பட்ட மரக்கன்றுகளை நட்டு வெற்றிகரமாக வளர்த்தவர்கள் மட்டுமே மரங்களின் எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த அரிய சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லப்படுவார்கள். அழைத்துச் செல்லப்படவிருக்கும் ஊர்கள் பின்வருமாறு:-

  1. திருவல்லம்
  2. தக்கோலம்
  3. காஞ்சிபுரம்
  4. மாமல்லபுரம்
  5. திருக்கோவிலூர்
  6. வீரநாராயண எரி (வீராணம்)
  7. சிதம்பரம்
  8. கொள்ளிடம்
  9. கொல்லிமலை
  10. கடம்பூர்
  11. திருப்பனந்தாள்
  12. பழுவூர்
  13. கீழைப் பழுவூர்
  14. திருமழைப்பாடி
  15. புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)
  16. திருபுறம்பியம்
  17. குடந்தை (கும்பகோணம்)
  18. பழையாறை
  19. திருவையாறு
  20. தஞ்சாவூர்
  21. உறையூர்
  22. கொடும்பாளூர்
  23. கோடிக்கரை

 

தொடர்புக்கு :

அறிவழகன் : +91 82206 85553

பாஸ்கர் : +91 80120 40502

ராஜ்குமார் :  +91 73975 90629

 

புத்தகம் தேவைப்படுவோர் எங்களிடம் விலைக்கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.

1 Comment found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *