நன்செய் அறக்குழு நடத்திய வினா விடைப் போட்டி – பிப்ரவரி 2021
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டத்தில் அமைந்துள்ள எங்கள் ஊராகிய அழகாபுரம் கிராமத்தில் இயங்கிவரும் நன்செய் அறக்குழுவானது மாணவர்களின் நூல் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும்பொருட்டு எங்கள் மாவட்டத்திலேயே முதன் முயற்சியாக மாதாந்திர வினா-விடைப் போட்டிகளை நடத்தும் திட்டத்தை அறிமுகம் செய்து அதை பிப்ரவரி முதல் மாதாமாதம் நடத்த திட்டமிட்டிருந்தோம்.

இம்மாதப் போட்டிக்குரிய புத்தமாக ஐயா. அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான “அக்னிச் சிறகுகள்” என்ற நூலை முன்மொழிந்தோம். அதை ஏற்று 25 மாணவர்கள் பெயர் கொடுத்திருந்தனர். அதைதொடர்ந்து அறிவித்திருந்தபடி முதல் போட்டியை (28-02-2021) அன்று நடத்தினோம்.

போட்டித் தேர்விற்க்கான நேரம் 60நிமிடங்கள் என்று வகுத்திருந்தபோதும். சில மாணவர்கள் முப்பது நிமிடங்களுக்குள்ளாக தேர்வை முடித்துவிட்டார்கள். குறித்த நேரத்திற்கு முன்பாகவே அனைவரும் தேர்வை எழுதி முடித்தவுடன் தேர்வுத்தாளை திருத்தி மாணவர்களை திறனாய்வு செய்து மதிப்பிடப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு:-
| 10வயது முதல் 15வயதினருக்கான போட்டியின் முதல் பரிசு | |
| பரிசை வென்றவர் : | ஆ. ரெணிட்டா |
| ஊர் : | சிவலிங்கபுரம், ஆண்டிமடம் |
| பரிசுத் தொகை : | ரூபாய். 1000.00 |



இப்பரிசுத் தொகையும் மரக்கன்றையும் ஆசிரியை திருமதி. கலைச்செல்வி அவர்கள் வழங்க, மாணவி ஆ.ச ரெனிட்டா அவர்கள் பெற்றுக்கொண்டார்.
| 16வயது முதல் 21வயதினருக்கான போட்டியின் முதல் பரிசு | |
| பரிசை வென்றவர் : | த. அனந்தகிருஷ்ணன் |
| ஊர் : | பெரியதிருக்கோணம் |
| பரிசுத் தொகை : | ரூபாய். 1000.00 |

இப்பரிசுத் தொகையும், மரக்கன்றையும் மு.ஊராட்சிமன்றத் தலைவர் திருமதி. சீத்தாலட்சுமி செல்வராசு அவர்கள் வழங்க, பெரியத்திருக்கோணத்தைச் சேர்ந்த மாணவர் ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
| 10வயது முதல் 15வயதினருக்கான போட்டியின் இரண்டாம் பரிசு | |
| பரிசை வென்றவர் : | க. தாரணி |
| ஊர் : | வானதிரையன்குப்பம் |
| பரிசுத் தொகை : | ரூபாய். 750 |

இப்பரிசுத் தொகையும், மரக்கன்றையும் நன்செய் அறக்குழுவைச் சேர்ந்த திரு. த. வீரமணிகண்டன் அவர்கள் வழங்க மாணவி தாரணி பெற்றுக்கொண்டார்.
| 16வயது முதல் 21வயதினருக்கான போட்டியின் இரண்டாம் பரிசு | |
| பரிசை வென்றவர் : | அ. ஜீவா |
| ஊர் : | அழகாபுரம் |
| பரிசுத் தொகை : | ரூபாய். 750 |

இப்பரிசுத் தொகையும், மரக்கன்றையும் நன்செய் அறக்குழுத் தலைவர் திரு. சா. முருகேசன் அவர்கள் வழங்க மாணவி அ.ஜீவா பெற்றுக்கொண்டார்.
| 10வயது முதல் 15வயதினருக்கான போட்டியின் மூன்றாம் பரிசு | |
| பரிசை வென்றவர் : | P. ஜெயவர்ஷினி & தி. அபி |
| ஊர் : | வானதிரையன் குப்பம் & அழகாபுரம் |
| பரிசுத் தொகை : | ரூபாய். 500 |

இப்பரிசுத் தொகைகளையும், மரக்கன்றையும் நன்செய் அறக்குழுவைச் சேர்ந்த திரு. மு. அறிவழகன் அவர்களும், திரு. இரா. ராஜேஷ் அவர்களும் வழங்க மாணவிகள் P. ஜெயவர்ஷினியும் மற்றும் தி. அபியும் பெற்றுக்கொண்டார்கள்.
| 16வயது முதல் 21வயதினருக்கான போட்டியின் மூன்றாம் பரிசு | |
| பரிசை வென்றவர் : | R. முகுந்தன் & B. பாலாஜி |
| ஊர் : | அழகாபுரம் |
| பரிசுத் தொகை : | ரூபாய். 500 |


இப்பரிசுத் தொகைகளையும், மரக்கன்றையும் ஆசிரியை சுலோச்சனா திருமாவளவன் அவர்களும், நன்செய் அறக்குழுவைச் சேர்ந்த திரு. சே. சுதாகர் அவர்களும் வழங்க மாணவர்கள் R. முகுந்தன் மற்றும் B. பாலாஜியும் பெற்றுக்கொண்டார்கள்.
பரிசுத் தொகை வென்றவர்களுக்கு மட்டுமில்லாமல் போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் தலா. ரூபாய் 100யும், மரக்கன்றுகளும் பரிசாக வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழா இனிதே நிறைவுற்றதைத் தொடர்ந்து விழாக்குழுவினரும் மாணவர்களும் இணைந்து புகைப்படம் எடுத்துகொண்டனர்.

அடுத்த மாதத்திற்கான போட்டிக்குரிய புத்தகமாக எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் எழுதிய “எண்ணங்கள்” என்ற புத்தகம் அறிவிக்கபடுகிறது. மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்போட்டி சிறப்புற நடைபெற நினைத்த, ஒத்துழைத்த, பங்கெடுத்த, பரிசளித்த, கொடையளித்த, ஊக்கமளித்த அனைவருக்கும் எங்கள் நன்செய் அறக்குழு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டு அடுத்த மாதம் இன்னும் சிறப்பாக இப்போட்டியில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
நன்செய் அறக்குழு அழகாபுரம்
