நன்செய் அறக்குழுவின் 6வது வாரந்திர கூடுதல்
நன்செய் அறக்குழுவின் 6வது வாரக்கூடுதல் Zoom செயலி மூலம் சிறப்பாக நடைபெற்றது.
சிங்கப்பூரிலிருந்து திரு. பழனிவேல் வேல்முருகன், திரு. ரெங்கசாமி சுரேஷ், திரு. ராமச்சந்திரன் பாலமுருகன், திரு. கொளஞ்சி செல்வக்குமரன், திரு. தன்ராஜ் பிரகாஷ், திரு. செல்வராஜ் வீரவேல், திரு. காமராசு பாலமுருகன், திரு. செல்வராசு வினோத் ஆகியோரும், அமீரகத்திலிருந்து திரு. ராஜேந்திரன் கருப்பசாமி, திரு. பிரபு, திரு. வேல்முருகன் அவர்களும், தமிழகத்திலிருந்து திருமதி பாலமுருகன் சுமதி, திரு. முருகேசன் அறிவழகன், திரு. ரவி ராஜ்குமார், திரு. செல்வராசு பாஸ்கர், திரு. சங்கர் ரகுநாத் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் கலந்து ஆலோசிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு…
1. நல்லது செய்பவரை பாராட்டுவதும், நன்றி தெரிவிப்பதும், தவறு செய்தால் அதற்கு கண்டனம் தெரிவிப்பதும் நல்ல குடிமகனின் கடமை என்பது குறித்து பேசப்பட்டது.
2. நன்செய் அறக்குழு மூலம் மாணவர்களுக்கு துணைப்பாட வகுப்புகள் (Tuition) எடுக்க ஏற்பாடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. நன்செய் அறக்குழுவின் வரைவறிக்கையில் கூறியுள்ளபடி மக்களுக்கு சேவை செய்யும் ஒரு “மக்கள் சேவை மையம்” நமது கட்டடத்தில் இடம் பெற்றாலும், அதன் செயல்பாடுகளை அடுத்த மாதத்திலிருந்தே துவக்க ஏற்பாடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது தமிழ் முருகன் அலுவலகத்திலேயே நன்செய் கட்டடம் கட்டும் வரை இயங்கும்.
4. நன்செய் அறக்குழு மூலமாக மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும் நோக்கில் தமிழ் முருகன் அலுவலகத்தில் நாளிதழ்கள், வார இதழ்களை வரவைத்து காலை 9.30மணி முதல் மாலை 6.00மணி வரை வாசிப்பதற்கு வைக்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. நமது ஊரில் உள்ள ஒவ்வொரு வைகயராவிற்கும் ஒருவர் பொறுப்பெடுத்து குறைந்தபட்சம் மூன்று தலைமுறை பெயர்களை Flowchart முறையில் வரைந்து ஆவணபடுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வன்னிமுண்டார் வகையறாவின் வரைபடத்தை ஏற்கனவே திரு காமராசு, பாலமுருகன் வரைந்து முடித்துவிட்டார். பின்னடையார் வகையறாவின் வரைபடத்தை திரு. செல்வராசு வீரவேல் வரைந்து வருகிறார். இதுபோல் மற்ற வகையராக்களிலும் அவர்களின் குடும்ப வரைபடத்தை வரைய இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இப்படி வரையும் அனைத்து படங்களும் நன்செய் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
6. நல்லோர் வட்டத்துடன் இணைந்து ஊரைத் தூய்மை செய்யும் பணியை நிறைவேற்றி ஊரில் உள்ள நெகிழி குப்பைகள் முழுவதையும் ஒரே நாளில் அழிக்க முடிவெடுக்கப்பட்டது.
7. ஊரில் ஒரு இலவச மருத்துவ முகாமை நடத்த முடிவெடுக்கப்பட்டது.
8. வரும் வாரங்களில் இன்னும் நிறைய உறவுகளை சந்திப்பில் பங்கெடுக்க வைக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
