நன்செய் இணையதளத் துவக்க விழா
அழகாபுரம் கிராம வளர்ச்சிக்காக நன்செய் அறக்குழுவின் இணையதள துவக்க விழா 05-01-2021 அன்று மாலை 4.00மணியளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சீத்தாலட்சுமி செல்வராசு அவர்கள் முன்ன்லை வகிக்க, தமிழைய்யா திரு. கோவிந்தசாமி அவர்கள் தலைமை தாங்க, நல்லோர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பாலசுப்ரமணியம் அவர்கள் துவக்கி வைத்தார்.

விழாவில் அனைத்து வயதினரும் கலந்துக்கொண்டு சிறப்பு செய்தனர். கிராம மக்கள் பலர் நன்செய் அமைப்பின் செயல்பாடுகளை கூறி அதற்கு உறுதுணை செய்திடும் ஒன்றுபட்ட பலத்தின் அவசியம் பற்றி கலந்துரையாடப்பட்டது.
மக்களின் அறியாமை நீங்கி கிராம வளர்ச்சி சார்ந்த முன்னேற்றம் அடைய தற்காலத் தொழில்நுட்பத்தின் உதவி உணர்த்தப்பட்டது.
நன்செய் இணையதளம் துவக்க நன்கொடையளித்த உள்ளங்கள்…
நன்செய் இணையதளம் துவக்க ஆன வரவு செலவு கணக்கு விவரம்
