நன்செய் இணையதள துவக்க விழா
நன்செய் அறக்குழுவின் இணையதள துவக்க விழா கடந்த 05.01.21 அன்று மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் மதிப்புமிகு. சீதாலட்சுமி செல்வராசு அவர்கள் முன்னிலையில், தமிழ்ப் புலவர் மதிப்புமிகு கோவிந்தசாமி அவர்கள் தலைமை வகிக்க “நல்லோர் வட்டம்” மதிப்புமிகு. பாலசுப்ரமணியம் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அழகாபுரத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மகளிர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கெடுத்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடைப் போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டது. விருந்தினர்கள் அனைவருக்கும் புத்தகங்கள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

