முகப்பு

சிங்கப்பூரில் பணியாற்றி வரும் அழகாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியன்று சிங்கப்பூரின் தோப்பாயோ நகரில் இக்குழுவை உருவாக்கினோம். பின்பு இக்குழுவில் வளைகுடா நாடுகளில் பணியாற்றிவரும் இளைஞர்களும், தமிழகத்தின் பிற நகரங்களில் பணியாற்றி வரும் இளைஞர்களும், இந்தியாவின் பிற மாநிலங்களில் பணியாற்றிவரும் இளைஞர்களும் இணைந்து ஊரை மேம்படுத்த அருஞ்செயலாற்றி வருகிறோம் .

வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் எங்களுக்கு கிடைத்த அனுபவத்தையும், பொருளாதாரத்தையும் கொண்டு ஊரின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதே இக்குழுவின் தலையாய நோக்கமாகும்.

அழகாபுரம் ஊராட்சியில் உள்ள குழந்தைகள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை உருவாகும் நோக்கில் பல்வேறு களப்பணிகளை செய்து வருகிறோம்.

அழகாபுரம் ஊராட்சியில் பிறக்கும் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களை சமூகத்தில் பெரும்பங்காற்ற வைக்கும் நோக்கிலும் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறோம்.

அழகாபுரம் ஊராட்சி மக்களின் அறியாமையைப் போக்கி அவர்களுக்கு அரசு வழங்கும் நலத் திட்டங்கள், இயற்கை வேளாண்மை மற்றும் கிராம சபை தொடர்பான விழிப்புணர்வையூட்டி வருகிறோம்.

அழகாபுரம் ஊராட்சியில் எல்லாவற்றிற்கும் அரசையே சார்ந்திராமல் எந்தெந்த வகையில் தற்சார்புடன் ஊரை மேம்படுத்த இயலும் என்ற நோக்கில் ஆய்வு செய்து  வருகிறோம்.

கிராமத்தின் பெரும் சாபக்கேடாக இருக்கிற மதுவை ஒழித்து, அடுத்த தலைமுறையினை மதுக் குடிக்காத மக்கள் உள்ள கிராமமாக மாற்ற வேண்டும் என்பது எங்கள் இலக்கு.

அடுத்த தலைமுறை பிள்ளைகளிடம் சாதி பேதமற்ற, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி,  சமூகத்தின் மீது அக்கறைக்கொண்டவர்களாக வளர்ப்பது மட்டுமின்றி நூறு சதவீத எழுத்தறிவுப் பெற்ற அடுத்த தலைமுறையினை உருவாக்குவதும் எங்கள் நோக்கம்.